மட்டு- செங்கலடி கானுக்குள் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியிலுள்ள வடிகானிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வடிகானுக்குள் இருந்தே இவ்வாறு இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொலிஸாருக்கு இன்று காலை வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் வடிகானிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது .


No comments

Powered by Blogger.