ரெலோ கட்சியின் இறுதி நிலைப்பாடு இன்று மாலைக்குள்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தாம் பிரிந்து செயற்படப் போவதாக அறிவித்துள்ள பங்காளிக்கட்சியான ரெலோ அமைப்பினர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்ரொரு பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரனை சந்தித்து பேசியுள்ளனர்.

இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

ரெலோ அமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் ஜெனா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

சந்திப்பில் உதய சூரியன் சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டள்ளது. 

இன்று மாலைக்குள் ரெலோ கட்சி தனது இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் தமது கட்சி இனிவரும் காலங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படாது என்றும் ரெலோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments

Powered by Blogger.