தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள் ஒரு முறைப்பாடு மட்டுமே கிடைத்துள்ளது. 

கடந்த 9ஆம் திகதி முதல் நேற்று வரையிலும் 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தேர்தல்கள் முறைப்பாடுகள் 10 ஆகும். தேர்தல்கள் சட்டத்தை மீறியமை தொடர்பிலான முறைப்பாடுகள் 06 ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.