இன்று இரவு இலங்கை வானில் நிகழவுள்ள இயற்கையின் வர்ணஜாலம்!!


இலங்கையின் வான்பரப்பில் இயற்கையின் வர்ணஜால நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு விண்கற்கள் மழை பொழியவுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பொழியும் ஜெமினிட் என்ற விண்கற்கள் பூமியில் விழும். இந்நிலையில் விண்கற்கள் மழையின் உச்ச நிலையை இன்று இரவு இலங்கை மக்கள் தெளிவாக காணும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான வானம் உள்ள இடத்தில் இரவு 9 மணிக்கு பின்னர் கிழக்கு வானிலும், நள்ளிரவில் வானத்திற்கு மத்திய பகுதியிலும், அதிகாலை மேற்கு வானிலும் நட்சத்திரம் போன்று விண்கற்கள் மழையை அவதானிக்க முடியும்.

அதிகாலை 2 - 4 மணியளவிலான காலப்பகுதியே விண்கற்கள் மழையை அவதானிப்பதற்கான மிக பொருத்தமான நேரம் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மணிக்கு கிட்டத்தட்ட 120 விண்கற்கள் பொழியும் எனவும், இதனை வெற்றுக் கண்களினால் பார்க்க வேண்டும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்த விண்கற்கள் மழை வெள்ளை, மஞ்சள், பச்சை, நீளம் மற்றும் சிகப்பு உட்பட பல நிறங்களில் பொழியும் என கூறப்படுகின்றது.

இந்த நிகழ்வு இலங்கை வாழ் மக்களுக்கு அபூர்வ நிழகழ்வு என பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.