அமைச்சரவை குழுவுடன் ரயில்வே ஊழியர்கள் பேச்சுவார்த்தை!


பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் குழுவில் நான்கு பேர் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், குழுவினரோடு ரயில்வே ஊழியர்கள் இன்றைய தினம்(13) பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்வதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் என ரயில்வே தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இன்றைய தினம் ரயில்வே பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பணிக்குத் திரும்பாதவர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என்றும் ரயில்வே திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.