சியம்பலாண்டுவையில் பெய்த கறுப்பு மழை

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இன்று (9) முற்பகல் கறுப்பு நிற மழை பெய்துள்ளது மக்களை ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
பெய்த மழை நீர் கறுப்பு நிறத்தில் இருந்ததைக் கண்டு பயந்த மக்கள், அது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், மழை நீரின் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இயற்கைப் பேரிடர்கள் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கறுப்பு நிற மழை மக்களை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

No comments

Powered by Blogger.