இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்!


இலங்கையில் நீண்ட இழுபறியின் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடைமுறை நேற்று முன்தினம் நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வந்தது.

இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முதற்கட்டத்தில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் 248 மன்றங்களுக்குமாக 341 உள்ளுராட்சி அமைப்புக்களுக்காக வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

மொத்தமாக 20 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சி உட்பட பல கட்சிகளின் வேட்புமனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனு தொடர்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்ட போதும் யாரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குற்றம் சாட்டியிருந்தார்.

இம்முறை தேர்தல் களத்தில் முதன்முறையாக முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி போட்டியிடுகிறது. இந்தக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுன கட்சியின் ஆகக் கூடுதலான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது வரலாற்றில் ஆகவும் கூடுதலான நிராகரிப்பாகும் என அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன என்ற கட்சி ஐந்து உள்ளுராட்சி நிறுவனங்களுக்காக தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அவற்றில் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரப்பனே பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை ஆகியவையும் அடங்கும்.

இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் அடங்கலாக பல கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி தேர்தல் வாக்குப் பதிவு அடுத்த வருடம் பெப்ரவரி பத்தாம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.