பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு அபராதம்!!

                                                                                                                        - அனோஜ் -
ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு பாதுகாப்பற்ற முறையில் சமைத்த உணவுகள் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லும் போது அப்பகுதியால் பயணித்து கொண்டிருந்த சுகாதார பரிசோதகர் (Phi) கண்களுக்கு இந்த சம்பவம் பதிவான போது பின்தொடர்ந்து சென்று குறிப்பிட்ட முச்சக்கர வண்டியினை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்துள்ளதோடு தகுந்த விழிப்புணர்வு அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் செய்துள்ளதாக மட்டு செய்தியாளர் குறிப்பிட்டார்.


உணவுப் பொருட்களை கையாளும் விதம் மிக மோசமான நிலையினை அதுவும் மட்டு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக கண்கூடாக காண முடிகிறது இனிமேலும் இவ்வாறான சட்டவிரோதமான சுகாதாரத்திற்கு முரணான செயலில் ஈடுபடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்.

No comments

Powered by Blogger.