பதுளை மாவட்டத்தில் வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து, தேர்தல் வேட்பு மனுக்க​ள், நேற்று (10), பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலகர் நிமால் அபயசிறியிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

பதுளை மாநகர சபை, ஹப்புத்தளை நகர சபை, மற்றும் பதுளை, ஹல்துமுள்ளை, ஹப்புத்தளை, லுணுகலை உள்ளிட்ட பதுளை மாவட்ட பிரதேச சபைகள் பலவற்றுக்குமான தேர்தல் வேட்பு மனுக்களே கையளிக்கப்பட்டன.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில், சட்டத்தரணிகளுடன் வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.