சில பிரதேசங்களுக்கு கடும் மழை மற்றும் மண் சரிவு எச்சரிக்கை!!

அடுத்த சில நாட்களுக்கு நாடு பூராகவும் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பஅந்த திணைக்களம் கூறியுள்ளது. 

மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான கடும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்யும் பட்ச்சத்தில் மண்சரிவு மண் மேடு இடிந்து விழுதல் பாறைகள் புரளுதல் நிலமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கட்டிட அமைப்பு பொது மக்களுக்கு அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது. 

காலி களுத்துறை ஆகிய பிரதேசங்களில் சில இடங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.