ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு சேவைக்கு திரும்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர் கல்வி தடைதாண்டல் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் உளரீதியான பாதிப்புகள் மிகுந்த கவனத்துடன் நோக்கப்படவேண்டும்.

எனவே, தமது மனிதாபிமான பணியை பொறுப்புடன் நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர முடியுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையிலேயே, ஜனாதிபதி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.