கூட்டமைப்பில் இருந்து நீங்குமா புளொட் அமைப்பு?!


தமிழரசுக் கட்சியுடன் அதிருப்தியடைந்துள்ள புளொட் அமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நீடிப்பது குறித்து, மத்திய குழுவைக் கூட்டியே ஆராய்ந்த பின்னரே முடிவை அறிவிக்கும் என, அந்த அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றன. 

இதேபோன்று புளொட் அமைப்பும் தமிழரசுக் கட்சியில் அதிருப்தியுற்றிருக்கின்ற நிலையில், அக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

எமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புளொட் அமைப்பின் மத்திய குழுவை கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 

அத்துடன், புளொட் அமைப்பு தனித்து நின்று உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள போவதில்லை என கூறியுள்ள சித்தார்த்தன், தங்கள் முடிவும் விரைவில் தெரிவிக்கப்படுமென்றார்.

No comments

Powered by Blogger.