கிழக்கில் ரணிலுடன் ஹக்கீம் இணைகின்றாரா?


கிழக்கில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் விசேட பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அலரிமாளிகையில் நடைபெறும் இந்தப் பேச்சுகளில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், பெப்ரவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆரம்பட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மும்முரமாக மேற்கொண்டுவரும் நிலையிலேயே, நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்துவந்த இந்த இருதரப்புப் பேச்சுக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விடயங்களில் இதுவரை எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை என்பதோடு, இதனாலேயே அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கூட்டணியும் கொழும்பில் தனித்துக் களமிறங்கத் தீர்மானித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.