தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்முனையில் வேட்பு மனு தாக்கல்


கல்முனை மாநகரசபைக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் முகவரான அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகர் திலின விக்ரமரத்னவிடம் வேட்புமனுவை கையளித்துள்ளார்.

முன்னதாக சம்மாந்துறை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய சபைகளுக்கான த.தே.கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த காரணத்தால் கல்முனை மாநகரசபைக்கான வேட்புமனு மிக அவதானமாக பூர்த்தி செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

கல்முனை மாநகரசபைக்கு 40 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். அதற்காக 43 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் 24பேர் கொண்ட பிரதான பட்டியலிலும் 7 தமிழ் வட்டாரங்கள் சார்பில் 8 பிரதான வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.