யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது.

யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று (08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று மாலை 2.15 மணிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.