ஓய்வு பெற்ற மற்றும் இடம்மாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!

                                                                                               - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஓய்வு பெற்று சென்றுள்ளவர்களையும்,இடமாற்றம் பெற்று சென்றுள்ளவர்களையும் பாடசாலையில் பாராட்டி கௌரவிப்பு.

இந்நிகழ்வு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபரும்,பாடசாலையின் நலன்புரி அமைப்பின் தலைவருவருமான ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் இன்று(7.12.2017) வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியசேவையில் இருந்து ஓய்வுபெற்று சென்ற ஆசிரியர்களான திருமதி கே.நல்லராசா,திருமதி.சௌதா-ஆறுமுகம்,திருமதி என்.அல்பேட்,திருமதி நளினா சிறிதரன் ஆகியோர்களுக்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போற்றி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டும், மற்றும் இடமாற்றம் பெற்று சென்றுள்ளவர்களான திருமதி. பீ.நாகராசா,திருமதி மலர்வேணி நவராஜ்,எம்.புவனேந்திரகுமார்,திருமதி என்.சிவகையிலிகுமாரன்,திருமதி என்.நித்திலம் ஜெயக்குமார்,நூலகர் திருமதி பஞ்சினி லோகநாதன் ஆகியோர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.இதன்போது தங்களின் அனுபவப்பகிர்வு,மறக்கமுடியாத அனுபவங்களையும் உள்ளத்திலிருந்து ஆசிரியர்கள் கொட்டிக்குவித்தார்கள்.
No comments

Powered by Blogger.