ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு


ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் திறப்பனை பிரதேசசபைக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

வெலிகம, மஹரகம, பாணந்துறை முதலான நகரசபைகள் மற்றும் அகவலத்தை, பதுளை, மஹியங்கனை, தெய்யத்தகண்டிய, பதியத்தலாவை முதலான பிரதேசசபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும், 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.