மட்டு- அரசாங்க அதிபரினால் பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி வர்த்தக மையம் திறந்து வைப்பு!!

                                                                                                   - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலைய வர்த்தக மையம் அரசாங்க அதிபரினால் திறந்துவைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிஒதுக்கீட்டில் மாவட்ட அபிவிருத்தி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்(Eu-DDP) மாவட்ட செயலகத்தின் கண்காணிப்புடனும்,UNDP நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடனும் வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் ரூபா 12மில்லியன் நிதியில் கல்லடி பாலத்தருகில் கட்டி முடிக்கப்பட்ட வர்த்த மையத்திறப்பு விழா திங்கட்கிழமை(4.12.2017) மாலை 5.00 மணியளவில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வர்த்த மையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்-உதயகுமார் பிரதம அதிதியாக வருகை தந்து திறந்துவைத்தார்.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன்,மாநகரசபை பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்,UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள்,மாவட்ட செயலகத்தின் பொருளாதார உத்தியோகஸ்தர்கள்,ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். 

இதன்போது அதிதிகளை மலர்மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதுடன் வர்த்தக மையத்தையும் திரைநீக்கிவைத்தார்.அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார் பதினொரு(11) உள்ளுர் உற்பத்தி வர்த்த மையத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.உள்ளுர் உற்பத்திக்களான கருவாடு, கூனிவகைகள்,நஞ்சற்ற பழவகைகளும்,காய்கறிகளும்,இலைவகைகளும்,பிரம்பு பனையோலை உற்பத்திப்பொருட்கள்,சுத்தமான தேன்கள்,சௌபாக்கியா உணவுகளும்,தானிய உணவுகளும்,நெசவு உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட பதினொரு வகையான வர்த்தக மையத்தை அதிதிகள் திறந்து வைத்தார்கள்.இதன்போது ஒவ்வொரு கடைத்தொகுதிக்குமான ஆவணங்களையும்,சாவிக்கொத்துக்களையும் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து ஒப்படைத்தார்.

No comments

Powered by Blogger.