மைத்திரியுடன் இணைந்த மகிந்த அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!


கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை சந்தித்து பேசிய அவர், ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது திகாமடுல்லை மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில், அம்மாவட்ட மக்களுக்காக அபிவிருத்தி செயற்திட்டங்களை பலமாக முன்னெடுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.