சம்மாந்துறையில் ஆணின் சடலம் மீட்பு.

சஞ்சயன்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி கப்பல் பாலத்திற்கு அருகாமையில்,இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நீரோடக்கு அருகில் இரத்த காயங்களுடன் காணப்படுவதுடன் குறித்த நபர் 30,35 வயதுக்குட்பட்டவராக இருக்கலாமென பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
 

 

No comments

Powered by Blogger.