அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் சீன நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏலவே திட்டமிட்டபடி அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று (9) ஆரம்பமாகின்றன.
இந்த ஒப்பந்தத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருந்தது.

இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை அரசு, சீனாவின் வரையறுக்கப்பட்ட ‘மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம், அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் நிறுவனம் என்பன இணைந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.