மாணவர் சீருடை விடயத்தில் மோசடி மேற்கொள்ளும் அதிபர்ளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

பாடசாலை மாணவர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் சீருடை வவுச்சர்களை மாணவர்களிடம் கையளிக்காது அதன்பொருட்டு புடைவைகளை வழங்குதல் அல்லது வேறு தலையீடுகளை மேற்கொள்ளும் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தமது அதிகாரிகளுக்கு நேற்று இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். 

அது தொடர்பாக வெளியாகியுள்ள சில செய்திகள் தொடர்பாக கவனம் செலுத்தியதன் அடிப்படையில் அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

சீருடை வவுச்சர் சீட்டுக்களின் ஊடாக பாடசாலை மாணவர்கள் தமக்கு விருப்பமான விற்பனை நிலையத்தில் புடைவைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

வர்த்தக நிலையங்களை விளம்பரப்படுத்தல், அங்கு கொள்வனவு செய்யுமாறு மாணவர்களை வலியுறுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாடசாலை அதிபர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. 

அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.