வெலிகடை சிறைச்சாலை தொம்பே பிரதேசத்திற்கு மாற்றப்படும்


வெலிகடை சிறைச்சாலைக்கு பதிலாக கம்பஹா மாவட்டம் தொம்பே பிரதேசத்தில் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியை குறைக்க இந்த புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற தனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க இரண்டு ஆண்டுகள் வரை செல்லும் எனவும் வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.