கூட்டமைப்புக்கு எதிரான புதிய கூட்டணியில் இணைந்த மற்றுமொரு கட்சி


உதய சூரியன் சின்னத்தில் ஆனந்த சங்கரி தலைமையிலான புதிய கூட்டணியில் ஹிரோஸ் ஜனநாயக முன்னணியும் இணைந்துள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினரினால் கூட்டமைப்புக்கு எதிராக அண்மையில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த கூட்டணியில் தற்போது ஹிரோஸ் ஜனநாயக முன்னணியும் இணைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஹிரோஸ் ஜனநாயக முன்னணியின் பொது செயலாளர் ராஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த புதிய கூட்டணியானது வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் போட்டியிடவுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.