அதிகாரிகள் கடமை புரியமுடியாதவாறு இடையூறுகளை விளைவிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்?


தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தமது கடமைகளைச் செய்யவிடாது இடையூறுகளை விளைவித்து வருவதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இதனை கண்டித்து பல்கலைக்கழக அதிகாரிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாக நிர்வாக கட்டடத்திற்குநிர்வாக கட்டடத்தை விட்டு நேற்று வேளியேறி தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஓகஸ்ட் மாதம் பொறியியல் பீட மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையையடுத்து பொறியியல் பீட மாணவர்கள் 3 பேருக்கு இரண்டு வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை மிக மோசமான முறையில் பகடிவதைக்கு உட்படுத்தியதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து இருவருக்கு 02 வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்தும் வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியும் இரண்டு பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் 03 நாட்களாக தொடர்ச்சியாக நிர்வாக கட்டடத்திற்கு முன்னால் சத்தியக்கிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு ஊழியர்கள் கடமை புரியமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவித்து நிர்வாகிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதனால் குறித்த மாணவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.