மன்னாரில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பு மனு தாக்கல்.

மன்னார் நிருபர்-
(21-12-2017)

-உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் மேற்கொள்ளும் இறுதி நாள் நேற்று வியாழக்கிழமை என்பதினால் அதிகலவான கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு இன்று (21) வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில்வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

-இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 12 மணிவரை வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி(ஈ.பி.டி.பி)அக்கட்சியின் மன்னார் மாவட்ட முகவரான செபமாலை திசை வீரசிங்கம் தலைமையிலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் செயலாளர் முஜீபு ரகுமான் தலைமையிலும்,
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மன்னார் மாவட்ட முகவரான அந்தோனி சகாயம் தலைமையிலும்,தேசிய கங்கிரஸ் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.எம்.நலர் தலைமையிலும்,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் சுயேட்சைக்குழு ஒன்று பொது வேட்பாளர் நிகால் நிர்மலராஜ் தலைமையிலும், சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பாக அதன் முகவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையிலும்,

தமிழர் விடுதலைக்கூட்டணி மன்னார் மாவட்ட முகவரான ஜேம்ஸ் ஜேசுதாஸ் தலைமையிலும், சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸ் மன்னார் மாவட்ட முகவரான ஹீனைஸ் பாரூக் தலைமையிலும், ஐக்கிய தேசியக்கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து றிப்கான் பதியுதீன் தலைமையிலும் வேட்பு மனுக்கலை தாக்கல் செய்திருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்டச் செயலக பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இறுதி அறிவித்தல் கிடைக்கும் வரை பல கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மன்னார் மாவட்டச் செயலகம் சார்ந்த பகுதிகளை சூழ்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.