காதலன் முகத்தில் ஆசிட் - சூப் மூலம் வெளிவந்த உண்மை!!

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சுவாதி தனது கணவர் சுதாகரை கள்ளக்காதலன் ராஜேசுடன் இணைந்து கொலை செய்தார். அவர் உடலை வனப்பகுதியில் புதைத்து வைத்தனர். சுவாதி, ராஜேசின் முகத்தை மாற்றி அவரை தனது கணவர் என கூறி ஏமாற்ற திட்டம் தீட்டினார். 
காதலன் முகத்தில் ஆசிட் - சூப் மூலம் வெளிவந்த உண்மை!
அதன் படி சுவாதி, ராஜேசின் முகத்தில் ஆசிட் ஊற்றினார். அவரது முகம் அடையாளம் தெரியாமல் மாறியது. பின்னர் தனது உறவினர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் சுதாகர் முகத்தில் பெட்ரோல் ஊற்றி விட்டதாக கூறினார். இதை நம்பிய அனைவரும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அவர்களின் நாடகம் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வால் வெளிச்சத்திற்கு வந்தது. ராஜேசிற்கு மட்டன் சூப் கொடுத்தனர். அவர் சைவம் என்பதால் சாப்பிட மறுத்துள்ளார். ஆனால் சுதாகர் அசைவம் சாப்பிடுபவர். இதனால், உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. 

சுதாகரின் பெற்றோர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். ராஜேசின் கைரேகையை சோதனை செய்ததில் அவர் சுதாகர் இல்லை என்பது தெரிய வந்தது. பொலிஸார் சுவாதியிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து பொலிஸார் சுவாதியை கைது செய்தனர். ராஜேஸ் மருத்துவமனையில் இருப்பதால் அவர் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments

Powered by Blogger.