சுதந்திரக் கட்சி அனாதைகளின் மடம்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அனாதைகளின் மடமாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
எப்பாவல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருக்கின்றதா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

எந்த அரசியல் பிச்சைக்காரனுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திறந்துள்ளது. டட்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் பெயர் பலகையை அனாதை மடம் என்று மாற்ற வேண்டும்.

வேறு கட்சிகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள், துரத்தப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கத்துவம் வழங்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அமைப்பாளர்களும் இல்லை, வேட்பாளர்களும் இல்லை.

நாட்டை கட்டியெழுப்பவும் நாட்டை அழிக்கவும் அரசியல்வாதிகளால் மாத்திரமே முடியும் எனவும் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.