கேப்பாப்புலவு வீதி புதுவருடப் பிறப்பில் மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படும்


இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள வற்றாப்பளை, கேப்பாப்புலவு வீதி புதுவருடப் பிறப்பில் இருந்து மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கேப்பாப்புலவு மற்றும் சீனியாமோட்டை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 133.34 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கும் நிகழ்வு நேற்று கேப்பாப்புலவில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு விடுவிக்கப்பட்ட காணிகளை பெறுப்பேற்று மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வற்றாப்பளை, கேப்பாப்புலவு வீதியில் சுமார் 6 கிலோமீற்றர் தூர வீதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால் மக்கள் பல கிலோ மீற்றர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது ஒரு தொகுதி காணி விடுவிக்கப்படுகின்ற நிலையில் வற்றாப்பளை, கேப்பாப்புலவு வீதி முழுமையாக விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி அந்த வீதி மக்களுடைய பாவனைக்காக திறந்து விடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.