ஒப்பந்த ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் புகையிரத திணைக்களம்


ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், அத்தியட்சகர்கள், புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோரை உடனடியாக கடமைக்கு வருமாறு புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் மஹாநாம அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இவர்களை சேவைக்கு அழைத்துள்ளதாக பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் கடமைக்கு திரும்பாத சகல புகையிரத திணைக்கள ஊழியர்களும் சேவையில் இருந்து விலகிச் சென்று விட்டனர் என்று கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.