முதல்பெண் பத்திரிகை புகைபட கலைஞருக்கு கூகுள் கௌரவம்


இந்தியாவின் முதல்பெண் பத்திரிகை புகைபட கலைஞரான ஹோமாய் வயரவாலாவின் 104 ஆவது பிறந்த நாளை கூகுள் நிறவனம் தன்னுடைய டூடுலில் கௌரவப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகை பட கலைஞர் என போற்றப்படும் ஹோமாய் வயரவாலா குஜராத் மாநிலத்தில் நவ்சாரி என்ற இடத்தில் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி பிறந்தார்.

இவர்களது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில் அங்குள்ள ஜே.ஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்டில் தன்னுடைய கணவரான மானக்ஷா வயரவாலாவை சந்தித்தார். இவரும் புகைப்பட கலைஞராவார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் அளித்த ஊக்கத்தினால் புகழ் பெற்ற பத்திரிகை புகைபட கலைஞராக திகழ்ந்தார். 

இந்தியா -பாக்கிஸ்தான் பிரிவினையின் போது முகம்மது அலி ஜின்னாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது மற்றும் திபெத்தில் இருந்து தலாய் லாமா இந்தியாவிற்கு வரும் போது அவரை சந்தித்தது போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

புகழ்பெற்ற கலைஞராக திகழ்ந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தனது 98 ஆவது வயதில் காலமானார்.

இன்று அவரது 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவரை கௌரவப்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.