சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் நாற்காலி சின்னத்தில் போட்டி


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் நாற்காலி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு தரப்பினருக்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் நடைபெற்றுள்ளன.

இதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் குறித்து இரவு முழுவதும் கலந்துரையாடியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணைவது தொடர்பில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பதவி மற்றும் அரியல் நோக்கங்களுடன் கூடிய சிலரே இரண்டு தரப்பும் இணைவதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதால், எந்த நிபந்தனைகளும் இன்றி அவர்களை கட்சியுடன் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரான முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையின் கீழ் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

No comments

Powered by Blogger.