ஆளுநரைச் சந்தித்து புகார் அளிப்பேன்..! விஷால் ஆவேசம்!!

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநரைச் சந்திக்கவுள்ளேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் இருந்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்காணியைச் நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமான புகாரை விஷால் அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்.வேட்புமனுவில் தவறு இருந்தால், வேட்பாளர் இருக்கும்போதே அதைக் கூறாதது ஏன். என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.