மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழையமாணவ சங்கத்தின் வருடாந்த கிறிஸ்மஸ் விழா.

(வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவசங்கத்தின் ஒழுங்கமைப்பில் சனிக்கிழமை(23.12.2017)காலை 10.00 மணியளவில் "வருடாந்த கிறிஸ்மஸ் விழா" பழைய மாணவசங்கத்தின் தலைவர் எஸ்.சசிதரன் தலைமையில் கல்லூரியின் காட்மண்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் எஸ்.எஸ்.தெரண்ஸ்,கல்குடா தூதுப்பணி பயிற்சி கல்லூரியின் அதிபர் சுசிதர் சிவநாயகம்,புளியந்தீவு மெதடிஸ்த சபையின் முகாமைக்குரு ஜே.டவூல்யூ.யோகராசா,போதகர்களான தெய்வேந்திரன்,வசந்தகுமார்,தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீடத்தின் தலைவர் Dr.சுஜித் தம்பு,பொறியியலாளர்களான வை.கோபிநாத்,உ.மயூரன்,வைத்தியர் நவரெட்ணம்-மௌலீசன்,ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப்பணிப்பாளர் கே.டேவிட்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்,பிரதிஅதிபர்கள்,பெற்றோர்கள், கல்லூரியின் பழைமாணவர் குடும்பங்கள் கலந்துகொண்டார்கள். சுடரேற்றல்,இறைவணக்கம்,கலைநிகழ்வுகள்,ஆசீச்செய்தி,பரிசுவழங்கல்,நத்தார் விஷேட செய்தி வழங்கள் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.