தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஐ.தே.க.வில் இணைவு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
வவுனியா - ஐக்கிய தேசியக் கட்சி தலைமைக் காரியாலயத்தில் இன்றைய தினம்(10) காலை இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தவிசாளராக இருந்த எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு தங்களை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்களுக்கான ஐ.தே.க. அங்கத்துவப் பத்திரத்தை கட்சியின் வவுனியா பிரதம அமைப்பாளர் கருணாதாச வழங்கி வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.