அரசியலில் குதித்த மற்றுமொரு நடிகர்..!!

‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை அடுத்து வெளியான ‘மௌனகுரு’ படம் சிறந்த வெற்றிபடமாக அமைந்தது. இப்படத்தை அடுத்து வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘பிருந்தாவனம்’ ஆகியவை ரசிகர்களை கவர்ந்த படங்களாக அமைந்தது.
இவரது நடிப்பில் தற்போது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் உருவாகி வருகிறது. இதில் இவருடன் அஜ்மல், மகிமா, சாயா சிங், சுஜா வருணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மாறன் இப்படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி அடுத்ததாக ‘புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அரசியல் சம்மந்தப்பட்ட இக்கதையை கரு.பழனியப்பன் இயக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பிந்துமாதவி நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை அக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

No comments

Powered by Blogger.