அம்பாந்தோட்டை துறைமுகம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை உத்தியோகபூர்வமாக குத்தகைக்கு விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன்போது, சீனாவின் தலைமை நிறுவனம் ஒன்று துறைமுகத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், இலங்கைக்கு குத்தகைப் பணத்தின் முதலாவது கொடுப்பனவும் செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டதற்குப் பின் இந்தப் பரிமாற்றல் நிகழ்வு நடைபெற்றது.

99 வருட குத்தகை அடிப்படையில் கைமாற்றப்பட்டிருக்கும் துறைமுகத்துக்காக மொத்தம் 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.

இதன் முதல் தவணைக் கொடுப்பனவான 293 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றுவோரின் உறவினர்கள் துறைமுக வளாகத்திற்கு எதிரே நின்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

துறைமுகத்தில் பணியாற்றும் தமது உறவினர்களின் தொழிலுக்கு உத்தரவாதம் வழங்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


No comments

Powered by Blogger.