வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் மாபெரும் பேரணி.

துறையூர் தாஸன்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு,மட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்ப உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் நடை பவனி பேரணி,அக்கரைப்பற்றில் இன்று(10) முன்னெடுக்கப்பட்டது.

எங்களது உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை எமது உறவுகளின் போராட்டம் தொடரும்,எங்களது உறவுகள் எமக்கு உயிருடன் வேண்டும்,காணமலாக்கப்பட்ட காரியாலயத்தில் உண்மை,நீதி,பரிகாரம்,மீள நிகழாமை ஆகிய நான்கு பொறிமுறைகளும் உள்ளடங்கி இருக்கவேண்டும்,பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளை உயர்த்துவதற்கு ஏற்புடைய நடவடிக்கைகளை செய்யுங்கள்,வதந்தியை நம்பாதீர்கள் உண்மையை கண்டறியுங்கள் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகள் மற்றும் வெனர்களை கைகளில் ஏந்திக்கொண்டு இளஞ்சிவப்பு துணியில் வலிந்து காணமலாக்கப்பட்ட உறவினர்களின் பெயரை பொறித்து அத்துணியை
முதுகில் போர்த்தி அமைதியா முறையில் தங்கள் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

இப்பேரணியானது அக்கரைப்பற்று பாதிப்புற்ற பெண்கள் அரங்கு அமையத்திலிருந்து ஆரம்பமாகி அக்கறைப்பற்று மணிக்கூட்டு கோபுர நகர் வரை சென்று மீளவும் வந்தடைந்தது.

இப்பேரணியில் சுமார் முந்நூறுக்கு மேற்பட்ட காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உள்ளக்குமுறல்களை வெனர்கள்,வாசகங்கள்,தோற்றம் ஊடாக இதன் போது நல்லாட்சி அரசுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.

அம்பாறை மாவட்ட குடும்ப ஒன்றியம்,அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு,சமூக சிற்பிகள் இளையோர் குழு ஆகிய மட்டு அம்பாறை மாவட்ட மகளீர் அமைப்புகள் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.