இந்து ஆலயத்தில் பெரும்பான்மையின பெண்ணொருவரின் செயலால் மக்கள் அதிருப்தி


மூதூரிலுள்ள ஆலயமொன்றிட்குள் நுழைந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் செயலானது வழிப்பாட்டுக்காக வந்தவர்களை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

இந்த சம்பவமானது நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்து மத ஆலயத்தின் திருத்தவேலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர், மூதூர் பிரதேச செயலாளர், பொலிஸார் மற்றும் பல அரச அதிகாரிகள் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த பெண் ஆலயத்திற்குள் நுழைந்த போது அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

அத்துடன் அவர் ஆலயத்திற்குள் பாதணியுடன் வந்தமையானது அங்கிருந்த பக்தர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த ஆலயமானது தொன்று தொட்டு இந்து மக்களால் வழிபட்டு வந்த நிலையில் இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்டது.

அத்தோடு இந்த பிரதேசம் முழுவதும் நூறுவீதம் இந்து மக்கள் வாழும் பகுதியாகும். எனவே இந்த நல்லாட்சி காலத்தில் இவ்வாறானதொரு செயற்பாடானது மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.