கட்சித் தாவும் படலங்கள் ஆரம்பம்


தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சித் தாவும் படலங்கள் ஆரம்பமாகியுள்ளன.

சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தாவும் படலங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனை தவிர வேறு சிறிய கட்சிகளை சேர்ந்தவர்களும் பிரதான கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.

இந்த நிலையில், கேகாலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை அமைப்பாளருமான டி.எம்.உபாலி திஸாநாயக்க இன்று ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து அதன் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசிய பின்னர் அவர் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டதாக தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.