மைத்திரியுடன் இணைய தயார், அனைத்தையும் மறக்கவும் தயார்: மகிந்த


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகினால் அவருடன் தொடர்ந்தும் செயற்பட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அப்படி செய்தால், அவருடன் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனைய அனைத்தையும் மறக்க தயார் எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் அனுராதபுரம் மாவட்டத்திற்கான வேட்புமனுக்களில் கையெழுத்திடும் நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் உடன்படிக்கைகளை செய்துக்கொண்டால், கூட்டு எதிர்க்கட்சியும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது என்பது போலாகிவிடும் என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு கோருவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.