மட்டு- மெதடிஸ்த கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு!!

                                                                                                   - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நாளை சனிக்கிழமை(16.12.2017) மாலை 6.00 மணியளவில் உப்போடை பறங்கியர் சபை மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிதரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவருமாகிய மாணிக்கம் -உதயகுமார் கலந்துகொள்ளவுள்ளார்.எனவே மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழையவர்கள் அனைவரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர்,செயலாளரிடம் தொடர்பு கொண்டு தங்களின் வரவை உறுதிப்படுத்தி கொண்டு கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

No comments

Powered by Blogger.