கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேசசெயலகத்தின் பிரதேச இலக்கிய விழா

செ.துஜியந்தன்

கலாசார அலுவல்கள் திணைக்களமும் கல்முனை தமிழ் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளர் க.லவநாதன் தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் இராஜகுலேந்திரன், கிராமசேவகர் நிர்வாக உத்தியோகஸ்தர் மித்திரன், கலாசாரபேரவை செயலாளர் கா.சந்திரலிங்கம், கலாசார உத்தியோகஸ்தர் ரி.பிரபாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதேசத்தில் கலைப்பணியாற்றிவரும் நான்கு மூத்த கலைஞர்கள் முதற்கட்டமாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களும், அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.No comments

Powered by Blogger.