சுகயீனமுற்ற ஈரான் இராணுவ வீரரை காப்பாற்றிய இலங்கை கடற்படை!!

இன்று அதிகாலை சர்வதேச கடல் பகுதியில் வைத்து, ஈரான் இராணுவத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்றில், பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒருவரை, இலங்கை கடற்படையினர், சிகிச்சைகளை வழங்க விரைவாக கரைக்கு அழைந்து வந்துள்ளனர். 

தனது கடமைகளை செய்து கொண்டிருந்த போது, திடீரென அவர் சுகயீனமுற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இது குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதும் பாதிக்கப்பட்ட ஈரான் இராணுவ வீரரை காப்பாற்ற இலங்கை கடற்படை விரைந்து சென்றது. 

இதனையடுத்து, மீட்கப்பட்ட குறித்த நபரை பத்திரமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வந்து, கடற்படை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

தற்போது அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 


No comments

Powered by Blogger.