கண்டி மன்னரை ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுத்த பண்டாரநாயக்க மற்றும் ஜெயவர்தன


இலங்கையின் இறுதி மன்னரான கண்டி இராஜ்ஜியத்தின் மன்னர் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனை ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுத்தவர்கள் ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் பண்டாரநாயக்க ஆகியோரின் முப்பாட்டன்மார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க பரம்பரையின் ஆரம்ப கர்த்தாவான சொலமன் டயஸ் பண்டாரநாயக்க, ஜெயவர்தன பரம்பரையின் ஆரம்ப கர்த்தாவான தம்பிமுதலி என்ற எட்ரியன் ஜெயவர்தன ஆகிய இருவரும் கண்டி இராஜ்ஜியத்தை கைப்பற்ற ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்கள்.

ஆங்கிலேயர்கள் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கு சியனே கோரள பகுதியின் முதலியார் பதவியை வழங்கியிருந்தனர்.

அத்துடன் தம்பிமுதலி என்ற எட்ரியன் ஜெயவர்தன, ஜோன் டொய்லி என்ற ஆங்கில அதிகாரிக்கு தன்னை அர்ப்பணித்த ஒற்றர்.

இவர்கள் இருவரும், கண்டி இராஜ்ஜிய பகுதியில் போமுரே உடுப்பிட்டிய ஆராச்சி என்பவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையின் இறுதி மன்னன் ஸ்ரீ விக்ரமராஜசிங்கனையும் அவரது குடும்பத்தினரையும் கடந்த 1815 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆங்கிலேயரிடம காட்டிக்கொடுத்துள்ளனர்.

மன்னரை அவமதித்து தூற்றியவர் என்ற வகையில் எட்ரியன் ஜெயவர்தன வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

அதேவேளை பண்டாரநாயக்க குடும்பத்தின் முதல் நபரான நீலப்பெருமாள் நாயக்கர் என்பவர், இந்தியாவில் இருந்து கண்டிக்கு வந்து கோயில் ஒன்றை ஏற்படுத்தி பண்டாரமாக பூஜை நடத்தி வந்ததாகவும் பின்னர், அவரது தனது பெயரை பண்டாரநாயக்க என்று மாற்றிக் கொண்டதாகவும் கண்டி மாவட்டத்தை சேர்ந்த சிங்களத்தில் மாவட்ட தலைவர் (திஸாநாயக்க) என்ற பொருளிலான பெயர் கொண்ட அமைச்சர் கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.