உலகின் கவனத்தை ஈர்த்த மட்டு-கிரானில் அமைந்துள்ள கட்டடம்!!

உலகின் சிறந்த கட்டடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள கட்டடமும் தெரிவாகி உள்ளது.

பிரித்தானிய நிறுவனம் ஒன்றினால் 2018ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த கட்டடங்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Royal Institute of British Architects - RIBA என்ற நிறுவனத்தினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலகம் முழுவதும் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட கட்டடங்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த பட்டியலில் இலங்கை கட்டடம் ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கிரான் பகுதியில் அமைந்துள்ள லங்கா லெர்னிங் சென்டர் என்ற கட்டடமே இவ்வாறு சிறந்த கட்டடங்களில் இணைந்துள்ளது.

“எதிர்காலத்தில் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் லங்கா லெர்னிங் சென்டர் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இங்கு கல்வி மற்றும் விளையாட்டு செயற்பாடுகளின்றி பாதிக்கப்பட்டுள்ள மத, இன வேறுபாடுகள் இன்றி சகலரும் பயன்பெற முடியும்.

லங்கா லெர்னிங் சென்டர் கட்டடம் இயற்கையை முழுமையாக பாதுகாத்து மிகவும் குறைந்த செலவில் நிறைவு செய்யப்பட்ட கட்டடமாகும்.

இந்தக் கட்டடம் உலகளாவிய ரீதியில் பெயரிடப்பட்டுள்ளமை இலங்கைக்கு கிடைத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.