போதை ஒழிப்பு நடைபவனி!!

                                                                                                 - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலயத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடைபவனி நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களின் ஒருங்கிணைந்த வழிகாட்டல்களுடனும் ஆலோசனைகளிலும் பாடசாலைகள்தோறும் பேண்தகு அபிவிருத்தியை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.இதனை மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள 64 பாடசாலைகளிலும் முறையாக வழிநடாத்தும்படி சகல பாடசாலைகளின் அதிபர்களை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரேசா பெண்கள் பாடசாலையில்(5.12.2017) இன்று புதன்கிழமை காலை 8.00 மணிமுதல் 10.00 மணிவரை மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு நடைபவணி அதிபர் திருமதி.மாலதி பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையிலிருந்து புறப்பட்ட நடைபவணி லேடிங்மனிங்ரைவ் வீதியூடாக பொலிஸ்மாதிபர் அலுவலகம்,சந்தை காந்திபூங்கா,மாவட்டசெயலகம் வரை சென்று மீண்டும் பிரதானவீதி பாதையூடாக பாடசாலையை வந்தடைந்தது.

இந்தநடைபவனி ஊர்வலத்தில் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் "போதையை ஒழிப்போம்", "மதுவை;புகைத்தலை குடிக்காதே" ,"போதைக்கு அடிமையாகி மரணம் எனும் பொறியில் அகப்படாதே" ,"நாட்டுக்குதேவை போதையற்ற மனித சமுதாயம்", "இரத்தமின்றி சத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது", "போதையை ஏற்றி நாட்டை சீரழிக்காதே", "அதிக விலைகொடுத்து போதையை பாவித்து மரணத்தை தழுவாதே" எனும் வாசகம் அடங்கிய பாதாதையை தூக்கியவாறு உரத்ததொனியில் மாணவிகள் நடைபவணியில் கலந்துகொண்டார்கள். 

இந்தநடைபவனியில் வீதிகளில் காணப்பட்ட வாகனங்களில் "போதையை ஒழிப்போம்" ,"போதையற்ற நாட்டை உருவாக்குவோம்" எனும் ஸ்ரிக்கர் வாகனங்களில் மாணவிகளால் ஒட்டப்பட்டது.


No comments

Powered by Blogger.