மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்


மட்டக்களப்பு - கும்புறுமூலை வெம்பு காட்டுப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம், இன்றைய தினம்(21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கும்புறுமூலை, வெம்பு பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என்றும், உயிரிழந்தவர் 45 – தொடக்கம் 50 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

Powered by Blogger.