இரண்டாயிரம் பத்தாயிரமாக உயரும்! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை


தற்போது இரண்டாயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயரும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினத்திற்குள் பணிக்கு திரும்பாத புகையிரதசேவை ஊழியர்கள் வேலையிலிருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக ருவன் பத்திரண குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன், அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களது வேலைநிறுத்த போராட்டத்தினை முடக்குவதற்காக எங்களை பணியிலிருந்து நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் தற்போது 2000 ஊழியர்கள் வரையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வேலைக்கு திரும்பாத அனைவரையும் அரசாங்கம் பணி நீக்கம் செய்யுமாயின் புகையிரத திணைக்களத்தையே இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.