இலங்கை Mp களுக்கு ஞாபக மறதி, லெப்டொப் பயன்படுத்தவும் தெரியாதாம்...!
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசனங்களுக்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள லெப்டொப்களில் (மடிக்கணினிகளை) 20 வீதத்திற்கும் குறைவானவை மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டிஜிட்டல்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதனை விடுத்து இன்னமும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடதாசிகளில் எழுதிவந்தே தமது உரைகளை ஆற்றுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடவுச்சொற்களை மறந்துவிடுகின்றனர். எனினும் அவர்களுக்காக கைவிரல் அடையாளங்களுடன் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.